ராகுல்காந்தியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவிற்கு உண்மையிலேயே பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிய ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட
ராகுல்காந்தியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவிற்கு உண்மையிலேயே பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிய ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட மாநில ஆளுநரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தில்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைவர்கள் நேற்று வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து தில்லியில் தங்கியுள்ள மு.க.ஸ்டாலின் இன்று தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார்.
சந்திப்பின்போது தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என மட்டும் என்னால் கூற முடியும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com