உ.பி.யில் நாளை 5-ஆம் கட்டத் தேர்தல்: ஓய்ந்தது பிரசாரம்

உத்தரப் பிரதேசத்தில் 5-ஆம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் திங்கள்கிழமை (பிப்.27) நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்றுவந்த பிரசாரம் சனிக்கிழமையுடன் ஓய்ந்தது.
உ.பி.யில் நாளை 5-ஆம் கட்டத் தேர்தல்: ஓய்ந்தது பிரசாரம்

உத்தரப் பிரதேசத்தில் 5-ஆம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் திங்கள்கிழமை (பிப்.27) நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்றுவந்த பிரசாரம் சனிக்கிழமையுடன் ஓய்ந்தது.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் 11 மாவட்டங்களில் உள்ள 51 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 5-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த சில தினங்களாக காரசாரமாக பிரசாரம் நடைபெற்று வந்தது.
இந்த பிரசாரத்தில் முக்கியக் கட்சிகளிடையே வார்த்தைப் போர் வெடித்தது.
"குஜராத்தில் உள்ள கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம்' என நடிகர் அமிதாப் பச்சனுக்கு அகிலேஷ் யாதவ் அறிவுரை வழங்கியிருந்தார். இந்தக் கருத்தானது, குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கருதப்பட்டது.
இதையடுத்து, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை விட கழுதைகள் விசுவாசமானவை; அவை என்றும் தங்கள் முதலாளிகளுக்கு துரோகம் செய்தது கிடையாது என்று பாஜக பதிலடி கொடுத்தது.
கழுதைகளிடம் இருந்து தாம் ஊக்கம் பெறுவதாகவும், இரவு-பகல் பாராமல் மக்களின் நலனுக்காக உழைப்பதாகவும் பிரதமர் மோடியும் பதிலடி கொடுத்தார்.
"கசாப்'பை உத்தரப் பிரதேசத்தில் இருந்து தூக்கியெறியும் வரை மாநிலம் வளர்ச்சி அடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, ஆங்கிலகத்தில் கசாப் (ந்ஹ-ள்ஹ-க்ஷ) என்பதற்கு க-காங்கிரஸ், ச-சமாஜவாதி, பி-பகுஜன் சமாஜ் என்ற பொருளில் அக்கட்சிகளை மாநிலத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, "அமித் ஷாவைத் தவிர வேறு யாரும் பயங்கரவாதியாக இருக்க முடியாது' என்று பதிலடி கொடுத்தார்.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகளில் ஒருவர் அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.
5-ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1.84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 96 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com