குஜராத்: மிகப் பெரிய விமான விபத்து தவிர்ப்பு

குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு விமானங்கள் மோதி ஏற்பட இருந்த மிகப் பெரிய விபத்து அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு விமானங்கள் மோதி ஏற்பட இருந்த மிகப் பெரிய விபத்து அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள், ஆமதாபாத் நகரில் சனிக்கிழமை கூறிய
தாவது:
ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து தில்லி புறப்பட 142 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை இரவு "ஸ்பைஸ்ஜெட்' நிறுவன விமானம் தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானம் மேலெழும்புவதற்காக சற்று தூரம் பயணிக்கும் சாலையில் "இண்டிகோ' நிறுவனத்தின் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
விமானங்கள் தரையிறங்கும்போதும், மேலெழும்பும் போதும் சம்பந்தப்பட்ட விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் தரும் தகவல்களையே விமான ஓட்டிகள் பின்பற்றுவார்கள். "ஸ்பைஸ்ஜெட்' விமானத்துக்கு வழிவிடுமாறு "இண்டிகோ' விமான ஓட்டிக்கு விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த விமானம் புறப்படத் தொடங்கியது. இதையடுத்து, "ஸ்பைஸ்ஜெட்' விமானத்துக்கு புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், "இண்டிகோ' விமானம் பாதி வழியில் சென்று நின்றதை கட்டுப்பாட்டு அறையிலிருந்த அதிகாரிகள் கவனித்தனர்.
அதைத் தொடர்ந்து, "ஸ்பைஸ்ஜெட்' விமானத்தை நிறுத்துமாறு தகவல் அளிக்கப்பட்டது. இதனால், இரண்டு விமானங்களும் மோதிக் கொள்ளாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. "இண்டிகோ' விமானி சாலையில் முயல்கள் இருந்ததால் விமானத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com