தமிழக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டுக்குள் தேர்தல் வரும்: மணிசங்கர் ஐயர்

தமிழக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டுக்குள் தேர்தல் வரும்: மணிசங்கர் ஐயர்

தமிழக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2017-18 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் என்று எதிர்பார்க்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறைக்கு முன்பாகவே சசிகலா தலைமையிலான அணியில் இருந்து சுமார் 10 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு வந்தனர். வாக்கெடுப்பு நடைமுறைக்கு தயாரான போது மேலும் சில எம்ஏக்கள் வந்தனர்.
இது தொடரும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். அந்த வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தாமாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனியாக ஒரு பேரவையை தமிழகத்தில் தொடங்கியுள்ளார். அதைக் "கட்சி'யாக தொடங்காமல் "பேரவை' என்ற குழுவாகவே தொடங்கியுள்ளார். இதன் மூலம் சசிகலாவுக்கு எதிரான அணியாக களம் இறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை பலப்படுத்தும் வகையில் தீபா செயல்படுவதாகக் கருதுகிறேன்.
எனவே, அதிமுக மூன்று பிரிவுகளாகி விட்டதாகக் கூற முடியாது. சசிகலாவுக்கு எதிரான உத்தியாகவே ஓ.பி.எஸ் அணி, தீபா குழு ஆகியவற்றை பார்க்கிறேன். இந்த உத்தி தமிழக அரசுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும்.
வெறும் ஆறு உறுப்பினர்கள் குறைந்தால் கூட பழனிசாமி அரசு சிறுபான்மை அரசு ஆகிவிடும். பழனிசாமி முதல்வர் பதவியை விட்டுச் சென்றாலும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியிலோ கட்சியிலோ எந்தப் பதவியும் கிடைக்கக் கூடாது என்று அக்கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் பூர்த்தியாகிறதா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் மணிசங்கர் ஐயர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com