பிஜேடி, காங்கிரஸ் கடும் அமளி: முடங்கியது ஒடிஸூ சட்டப் பேரவை

ஒடிஸூ குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து, பிஜு ஜனதாதளம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒடிஸூ சட்டப் பேரவை சனிக்கிழமை முடங்கியது.

ஒடிஸூ குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து, பிஜு ஜனதாதளம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒடிஸூ சட்டப் பேரவை சனிக்கிழமை முடங்கியது.
உத்தரப் பிரதேச மாநிலம், கொண்டா எனுமிடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, ஒடிஸூவில் வறுமை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஒடிஸூ சட்டப் பேரவை சனிக்கிழமை காலையில் தொடங்கியதும் இந்த விவகாரத்தை பிஜு ஜனதாதள உறுப்பினர் சமீர் ரஞ்சன் தாஸ் எழுப்பினார். ஒடிஸூ மாநிலத்தில் கடும் வறுமை, பட்டினி என்கிற தொனியில் பிரதமர் பேசியது மிகவும் துரதிருஷ்டவசமானது; அவரது பேச்சு மாநில மக்களை அவமானப்படுத்தியிருக்கிறது என்றார் தாஸ்.
தாஸýக்கு பிற பிஜு ஜனதாதள உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் கொறடா தார பிரசாத் பாஹிணிபதி பேசியபோது, ஒடிஸூ குறித்து மோடி பேசியது மிகவும் வெட்கக்கேடானது, பொருத்தமில்லாதது என்றார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டவாறு அவையின் மையப் பகுதிக்கு விரைந்ததால் கடும் அமளி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து பிஜு ஜனதாதள உறுப்பினர்களும் மையப் பகுதிக்குச் சென்றனர். நிலைமைக் கட்டுக்கு அடங்காமல் போகவே அவையை காலை 11.30 மணி வரை பேரவைத் தலைவர் நிரஞ்சன் பூஜாரி ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடியபோதிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மையப் பகுதிக்குச் சென்று கூச்சல் எழுப்பியதால், அமளி நீடித்தது. கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த இயலாததால், முதலில் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி வரையிலும் பேரவையை ஒத்திவைத்தார் பூஜாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com