நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் வந்தாச்சு 'மகிழ்ச்சித் துறை' !

நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்கள் நலனுக்காக 'மகிழ்ச்சித் துறை' என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய மத்திய பிரதேச அரசு, அதை தற்போது மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் வந்தாச்சு 'மகிழ்ச்சித் துறை' !

போபால்: நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்கள் நலனுக்காக 'மகிழ்ச்சித் துறை' என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய மத்திய பிரதேச அரசு, அதை தற்போது மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகள் தகுதியான நபர்களிடமிருந்து சென்று சேர்வதை உறுதி செய்வதன் பொருட்டு 'மகிழ்ச்சித் துறை என்ற ஒன்றை மத்திய பிரதேச அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

தற்போது அந்த துறையை மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களுக்கும், விரிவு செய்வது என்று அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'இந்த துறையானது உதவிகள் தேவைப்படுபவர்கள் மற்றும் உதவி பெறுவோர் ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் பயன் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் சமுகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சந்தோஷமும் திருப்தியும் அடைவதை உறுதி செய்வதே இத்துறையின் அடிப்படை நோக்கம் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com