ஐந்து மாநில தேர்தலுக்கு அப்புறம்தான் மத்திய பட்ஜெட்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையீடு!    

விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.
ஐந்து மாநில தேர்தலுக்கு அப்புறம்தான் மத்திய பட்ஜெட்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையீடு!    

புதுதில்லி: விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 4-அம தேதி தொடங்கி மார்ச்மாதம் 8-ஆம் தேதி வரை தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தில்லியில் தலைமைத் தேர்தல்  ஆணையரைச்  சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தன.  அதில் விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மனு கொடுத்து விட்டு வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைந்த ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையரைச் சந்தித்தோம்.ஐந்து மாநில சட்டசபை  தேர்தல்கள் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக மத்திய பட்ஜெட்தாக்கல்  செய்யயப்பட இருப்பது பற்றிய எங்களது கருத்தை வெளிப்படுத்தினோம். இவ்வாறு செய்யப்படுவதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு நியாயமற்ற சலுகை கிடைப்பதோடு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாக அமைகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com