பாதுகாப்புப் படை வீரர்களுக்கான உணவுப்பொருட்கள் பாதிவிலையில் விற்கப்படுகிறது: கிராம மக்கள் குற்றச்சாட்டு

எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த உயரதிகாரிகள், வீரங்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பாதி விலையில்
பாதுகாப்புப் படை வீரர்களுக்கான உணவுப்பொருட்கள் பாதிவிலையில் விற்கப்படுகிறது: கிராம மக்கள் குற்றச்சாட்டு

புதுதில்லி: எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த உயரதிகாரிகள், வீரங்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பாதி விலையில் பொதுமக்களுக்கு விற்பதாக பாதுகாப்பு படை முகாம் அருகே வசிக்கும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாக 29-வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் தேஜ் பகதூர் யாதவ் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரேஷன் பொருட்களை பொதுமக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ அதிகாரிகள் விற்பனை செய்வதாக எல்லைப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு உறங்க செல்ல நேரிடுவதாகவும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் புகாரை தெரிவித்த வீரர், தேஜ் பகதூர் யாதவ் ஒரு குடிகாரர் என்றும், பணியின்போது தவறுகள் புரிந்ததற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு அருகே வசிக்கும் மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடமிருந்து வீரர்களுக்கான ரேஷன் பொருட்களான அரிசி, பெட்ரோல், மசாலா சாமான்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் எல்லையோர மக்களிடம் பாதிவிலைக்கு விற்பனை செய்வதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், எரிப்பொருட்களையும் சந்தைவிலையைவிட பாதிவிலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேபோல் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு தேவையான நாற்காலி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு கூட டெண்டர் முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில் பொருட்கள் வாங்கப்படுவதாகவும், பொருட்களின் தரமும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் எழுப்பிய குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த பரபரப்பு அரங்கேறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com