முன்கூட்டியே பட்ஜெட்  தாக்கல்: மத்திய அரசை கட்டுப்படுத்த சட்டம் இல்லை!

பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே பட்ஜெட்  தாக்கல்: மத்திய அரசை கட்டுப்படுத்த சட்டம் இல்லை!

புதுதில்லி: பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடியும் வரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளி வைக்க கோரி தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவசர வழக்காக இந்த மனுவை விசாரிக்க கோரிய அவரது வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே .எஸ்.கேஹர் மற்றும் ஒய்.எஸ்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்வதிலிருந்து மத்திய அரசை தடுக்க எந்த சட்டப் பிரிவும் இல்லை என்று நீதிபதிகள்கருத்து தெரிவித்தனர். மேலும் எந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் மனுதாரர் அவ்வாறு கோருகிறார் என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். 

இந்த வழக்கை ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அதற்குள் உரிய சட்டப் பிரிவை கண்டு தெரிவிக்குமாறு ஷர்மாவிடம் தெரிவித்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com