ஆர்எஸ்எஸ்-இல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அத்வானி

ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
ஆர்எஸ்எஸ்-இல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அத்வானி

ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

பிரஜாபிதா பிரம்மாகுமாரி ஐஸ்வரிய பல்கலைக்கழகத்தை நிறுவியவர் பிதாஸ்ரீ பிரம்மா ஆவார். பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் அமைப்பின் தலைவராக அவர் பதவியேற்றதன் 48-ஆவது ஆண்டு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:
அதிக அளவில் பெண்களால் நடத்தப்படும் இதுபோன்ற எந்த அமைப்பையும் நான் கண்டதில்லை. இது மிகவும் வியக்க வைக்கிறது. நான் நீண்ட காலமாக ஓர் அமைப்புடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்பு கொண்டுள்ளேன். அந்த அமைப்பை மிகவும் மதிக்கிறேன். என்னைச் சந்திக்கும் யாரிடமும், அந்த அமைப்பிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு கூறுவது என் வழக்கம். ஆனால், அது சற்று கடினமானதே தவிர சுலபமானதல்ல. நான் ஆர்எஸ்எஸ் அமைப்பையே குறிப்பிடுகிறேன். அந்த அமைப்பில் ஆண்களே தங்கள் சிறுவயதில் இணைகின்றனர். அங்கு பெண்களுக்கும் சிறிய அளவில் பிரதிநிதித்துவம் உள்ளது.
பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் அமைப்பு தன் தலைமைப் பொறுப்புகளில் அதிக அளவில் பெண்களை நியமித்துள்ளது. அதே போல் மக்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதிக அளவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தற்போது பாகிஸ்தானில் உள்ள மாகாணத் தலைநகரான கராச்சியில்தான் நான் பிறந்தேன். அது இந்தியாவுடன் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. சிந்து மாகாணம் இல்லாத இந்தியா என்பது முழுமை அடையாததாகக் காட்சியளிக்கிறது.
கராச்சியும், சிந்து மாகாணமும் இந்தியாவுடன் இல்லை என்பதை நினைத்து சில நேரங்களில் வேதனையடைவேன். சிந்து மாகாணத்தில் நான் சிறுவயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மிகத் தீவிரமாகப் பணியாற்றினேன் என்றார் அத்வானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com