காந்தி படத்துடன் காலணி விற்பனை: அமேசான் மீண்டும் சர்ச்சை

இந்திய தேசிய கொடி படம் வரைந்த கால் மிதியடி விற்பனை தொடர்பான சர்ச்சை தற்போதுதான் முடிந்துள்ள நிலையில், தேசப் பிதா மகாத்மா காந்தியின் உருவப் படத்துடன் அமேசான் நிறுவனம் காலணி விற்பனை செய்வது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி படத்துடன் காலணி விற்பனை: அமேசான் மீண்டும் சர்ச்சை

இந்திய தேசிய கொடி படம் வரைந்த கால் மிதியடி விற்பனை தொடர்பான சர்ச்சை தற்போதுதான் முடிந்துள்ள நிலையில், தேசப் பிதா மகாத்மா காந்தியின் உருவப் படத்துடன் அமேசான் நிறுவனம் காலணி விற்பனை செய்வது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்தின் கனடா விற்பனை இணையதளத்தில் இந்திய தேசிய கொடியின் படம் வரைந்த கால் மிதியடி விற்பனை செய்யப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் கடும் எச்சரிக்கை விடுத்தார். அதாவது, அந்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த யாருக்கும் இந்தியாவில் நுழைவு இசைவுச் சீட்டு (விசா) அளிக்கப்பட மாட்டாது என்று அவர் எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து அமேசான் நீக்கியது. மேலும், தனது செயலுக்காக இந்திய அரசிடம் அமேசான் நிறுவனம் மன்னிப்பும் கோரியது.
இந்நிலையில், அமேசான் இணையதளத்தில் காந்தியின் படத்துடன் காலணிகள் விற்பனை செய்யப்படுவதாக சுஷ்மாவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக சுஷ்மா ஸ்வராஜின் சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில், அமேசானின் அமெரிக்க விற்பனை இணையதளத்தில் காந்தி படத்துடன் கூடிய காலணி விற்பனை செய்யப்படுவதற்கான படத்தையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், இந்திய சின்னங்கள், தலைவர்களின் படத்தை பயன்படுத்துவதை அமேசான் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அமேசான் நிறுவனத்தின் நடவடிக்கைகள் கவலையளிப்பதால், இந்தியர் என்ற முறையில் இந்த கருத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com