தேர்தல் நடத்தை விதிமுறை: முதல்வர், அமைச்சர்களுக்கு புதிய கட்டுப்பாடு

உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அரசு அமைப்புகளின் முறையீட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அரசு அமைப்புகளின் முறையீட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின்னரும், உங்கள் (சம்பந்தப்பட்ட தலைமைச் செயலர்கள்) மாநில முதல்வர், அமைச்சர்கள், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அரசு அமைப்புகளில் நடைபெறும் மேல்முறையீட்டுக் கூட்டங்களில் பங்கேற்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாக்காளர்களைக் கவரும் வகையில் அமைந்துவிடும். எனவே, உங்கள் மாநிலத்தில் தேர்தல் முடிவடையும் வரையில் இதுபோன்ற முறையீட்டுக் கூட்டங்கள் நடைபெறக் கூடாது. இதனை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், நீதிமன்ற ஆணையின்படியோ அல்லது சட்டப் படியோ கட்டாயம் நடைபெற்றாக வேண்டும் என்ற தருணத்தில் இதுபோன்ற கூட்டங்களை அந்தந்த மாநிலத் தலைமைச் செயலர்களால் நியமிக்கப்படும் செயலர்கள் நிலையிலான அலுவலர்களின் தலைமையில் நடத்தலாம்.
இந்த ஆணைக்கு இணங்குவது குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் விடுத்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com