தெரு நாய்களுக்கும் வாழும் உரிமை உண்டு

தெரு நாய்களுக்கும் வாழும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தெரு நாய்களுக்கும் வாழும் உரிமை உண்டு

தெரு நாய்களுக்கும் வாழும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நாட்டில் உள்ள தெரு நாய்களை ஒழிப்பது தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சில மனுக்களில் தெரு நாய்களை முற்றிலுமாக அழித்துவிட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கேரளம் மற்றும் மும்பையில் தெரு நாய்களை முழுமையாக ஒழிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென்று பல்வேறு மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தெரு நாய்களை யாராலும் முற்றிலுமாக ஒழிக்க முடியாது. அவற்றுக்கும் வாழும் உரிமை உண்டு. அதே நேரத்தில் தெரு நாய்கள் பெருகுவதைக் கட்டுப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கேரளத்தில் தெரு நாய்களால் மனித உயிர்கள் பலியாவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தெரு நாய்களையும் கொல்ல முடியாது. நாய் கடித்து மனிதர் ஒருவர் இறந்துவிட்டால், அது விபத்துதான். அதற்காக அனைத்து நாய்களையும் கொன்றுவிட வேண்டுமென்று கூற முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ ஜெகன் தலைமையில் ஒரு குழுவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாய்க்கடி தொடர்பான 400-க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளது. இதில் 24 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை காப்பகங்களுக்கு எடுத்துச் சென்றுவிட்டால் அவற்றால் வெளியேற முடியாது. தெரு நாய்களின் பெருக்கத்தை குறைக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அவற்றைக் கொல்லக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கேரளத்தில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும், பள்ளிக்குச் செல்லவே மாணவர்கள் அஞ்சி வருவதாகவும் மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com