மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்கக் கோரும் வழக்கு: திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு!

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடியும்வரை மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம்...
மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்கக் கோரும் வழக்கு: திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு!

புதுதில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடியும்வரை மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் வரும் பிப்ரவரி மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நடை பெற உள்ளன. எனவே இந்த தேர்தல்கள் நடந்து முடியும் வரை மத்தியபட்ஜெட் தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி, தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் ஒய்.எஸ்,.சந்திரசூட் அடங்கிய அமர்வானது மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகள் எதுவுமிருந்தால் அது பற்றிய விபரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு மனுவை இன்று ஒத்திவைத்தனர்.        

இன்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தற்பொழுது மனுதாரர் ஷர்மா தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாணப் பாத்திரங்களை பரிசீலிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திங்கள் அன்று தான் இதுகுறித்து வாதாட தயாராக உள்ளதாக வும் மனுதாரர் ஷர்மா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com