ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்: சட்ட விதிகளை திருத்த பிரணாப் ஒப்புதல்

ரயில்வே பொது பட்ஜெட்டையும் சேர்த்து ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்
ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்: சட்ட விதிகளை திருத்த பிரணாப் ஒப்புதல்

ரயில்வே பொது பட்ஜெட்டையும் சேர்த்து ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை மத்திய அரசு தனித்தனியாக தாக்கல் செய்வது வழக்கம்.
இந்நிலையில், அரசின் பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய சீர்திருத்தமாக, 2017-18-ஆம் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்து தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, மக்களவைச் செயலகத்தின் சமீபத்திய உத்தரவின்படி, ரயில்வே பட்ஜெட்டுடன் இணைத்து பொது பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பணிகள், பொருளாதார விவாகரங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்விரு பட்ஜெட்டுகளையும் சேர்த்து தயாரிக்கும் வகையில், இந்திய அரசின் அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 1924-ஆம் ஆண்டு முதலே ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும் மரபாக அது தொடர்ந்து வந்தது. இந்நிலையில் வரும் நிதியாண்டு முதல், ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இதனிடையே, நிதியாண்டு தொடங்குவதற்கு முன் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக, ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்டை பிப்ரவரி கடைசி வாரத்தில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, 2017-18-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பொது பட்ஜெட், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியன்றே தாக்கல் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com