ஜல்லிக்கட்டு போராட்டம் ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஒரு பாடம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்கள், ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஒரு பாடம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இது, தமிழர்களின் உணர்வை அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
இதேபோல, இந்தியா போன்ற வேறுபட்ட கலாசாரங்களை கொண்ட நாட்டில், பொது சிவில் சட்டம் என்பதும் சாத்தியமில்லை. பொது சிவில் சட்டம் கோரும் ஹிந்துத்துவா சக்திகளுக்கு, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பல்வேறு இன மக்களை கொண்ட நமது நாட்டின் நலனுக்கு, பொது சிவில் சட்டம் நல்லதல்ல. இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்று ஒவைஸி கூறியுள்ளார்.
இதேபோல, அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "தங்களது ஒற்றுமையால், உச்சநீதிமன்ற தீர்ப்பையே முறியடிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவதற்கு, மோடி அரசையும், அதிமுக அரசையும் தமிழக மக்கள் நிர்பந்தித்து விட்டனர்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com