பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறை: ரயில்வே விளக்கம்

பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) ஆகியவற்றைப் பயன்படுத்தி "ஸ்வைப்' மெஷின் மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம்

பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) ஆகியவற்றைப் பயன்படுத்தி "ஸ்வைப்' மெஷின் மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் 10,000 "ஸ்வைப்' மெஷின்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், ரயில்வே கவுன்டர்களை அணுகி டிக்கெட்டை ரத்து செய்துகொள்ள முடியும். பற்று அட்டைகளை மீண்டும் எடுத்து வரவேண்டியதில்லை. இதையடுத்து, முன்பதிவு தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் 7 தினங்களில் வரவு வைக்கப்படும்.
ஒருவேளை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யவில்லை எனில், ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் நபர் "ஸ்வைப்' மெஷினில் தனது பற்று அட்டை அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்த வேண்டும்.
அதன் மூலம், அந்த நபரின் வங்கி விவரங்கள் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்த தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com