ஹஜ் யாத்திரை: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மிகுந்த வரவேற்பு

முஸ்லிம்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்துக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை மக்கள் வரவேற்கின்றனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
ஹஜ் யாத்திரை: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மிகுந்த வரவேற்பு

முஸ்லிம்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்துக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை மக்கள் வரவேற்கின்றனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவை தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்தே தீர வேண்டும் என்பது முஸ்லிம் மக்களின் லட்சியக் கனவாகும். அதற்கான மானியத்தை ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தப் புனிதப்பயணத்துக்கு மானியம் பெறுவோருக்கான தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய ஹஜ் யாத்திரை சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணையம் மூலமாகவும், ஹஜ் செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பித்துள்
ளனர்.
இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேசி வரும் 24-ஆம் தேதி ஆகும்.
விண்ணப்பித்தோரில் 34,500-க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வர். இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகள் கழித்து இந்த முறை அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான மானியம் கட்டாயம் வழங்கப்படும். பயணிகள் தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு ஆகிய வசதிகள் குறித்து சவூதி அரேபிய அரசுடன் விவாதித்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com