பொது சிவில் சட்டம்: இந்தியாவின் அவசரத் தேவை

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம்: இந்தியாவின் அவசரத் தேவை

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இலக்கியத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் திங்கள்கிழமை பங்கேற்று தஸ்லீமா நஸ்ரீன், பேசியதாவது: ஹிந்து மதத்தையோ, புத்த மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ நானோ, வேறு யாரோ விமர்சித்தாலும் எதுவும் நடப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய மதத்தை யாராவது விமர்சித்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
விமர்சித்துப் பேசியவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அவர்களைக் கொல்லவும் விரும்புகிறார்கள். ஆனால், அவ்வாறு சிலர் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
ஒருவர் விமர்சித்துப் பேசினால் அவருக்கு எதிராக எழுதலாம். தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குப் பதிலாக முஸ்லிம்கள் உரையாடல்களில் ஈடுபடலாம்.
முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களின் உரிமைகளைக் காக்க பொது சிவில் சட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்ய முடிகிறது. அவர்களுக்கு சொத்துரிமையும் உள்ளது. அது எவ்வளவு முற்போக்கானது என்பதை நாம் காண்கிறோம். இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்பது ஏன்? பொது சிவில் சட்டம் இருப்பது ஜனநாயகரீதியிலானது இல்லையா?
பெண்களின் உரிமைகளைக் காப்பதற்கு இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது. மத அடிப்படைவாதிகள் சுயபரிசோதனை செய்து கொண்டு, தாங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதது ஏன்? என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். இஸ்ஸாமிய சமூகத்திற்கு சகிப்புத்தன்மையும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் அவசியம். இது இல்லாவிட்டால் அவர்களால் முன்னனேற்றம் காணமுடியாது.
எனக்கு தேசியவாதத்திலோ, அடிப்படைவாதத்திலோ நம்பிக்கை இல்லை. ஒரே உலகம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உரிமைகள், சுதந்திரம், மனிதத்தன்மை, விவேகமான பகுத்தறிவு ஆகியவற்றை நான் நம்புகிறேன். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத வரை எந்தவொரு இஸ்லாமிய நாடும் மதச்சார்பற்றதாக கருதப்படாது. நான் விமர்சிக்கும்போதெல்லாம் சிலர் என்னைக் கொல்ல விரும்புகின்றனர் என்றார் தஸ்லீமா நஸ்ரீன்.
வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் சர்ச்சைக்குரிய "லஜ்ஜா' என்ற நாவலை 1990-களில் எழுதினார். அதில் இஸ்லாமிய மதத்தை விமர்சித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அடிப்படைவாதிகளில் அச்சுறுத்தலுக்கு ஆளான தஸ்லீமா, 1994இல் ஸ்வீடனுக்குத் தப்பிச் சென்றார். 10 ஆண்டு காலம் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்திருந்தார். 2004}இல் இந்தியா வந்தார். மீண்டும் 2008}இல் ஸ்வீடன் சென்று விட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com