மம்தா அரசுக்கு எதிராக மாபெரும் இயக்கம்: பாஜக திட்டம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராக மாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராக மாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் 2 நாள்கள் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தாவில் பாஜக பொதுச் செயலாளரும், மாநில பாஜக ஒருங்கிணைப்பாளருமான கைலாஷ் விஜயவர்கீய தெரிவித்ததாவது: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமராக வேண்டும் என்று கனவு காண்கிறார்.
அவரது தவறான ஆட்சிக்கு எதிராக மாநில முழுவதும் மாபெரும் இயக்கத்தைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது.
பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே மறைமுகக் கூட்டணி உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தால் பாஜக பாதிக்கப்பட்டது.
ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருவர் கைது செய்யப்பட்ட பின்னர் அதுபோன்ற அரசியல் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் வங்கத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com