ஒன்றாக கைகோர்க்கப் போகும் வோடாபோன்-ஐடியா : கலக்கத்தில் ஏர்டெல், ஜியோ !  

இந்திய தொலைபேசி துறையின் இரு பெரும் கம்பெனிகளான வோடாபோன் மற்றும் ஐடியா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக...
ஒன்றாக கைகோர்க்கப் போகும் வோடாபோன்-ஐடியா : கலக்கத்தில் ஏர்டெல், ஜியோ !  

புதுதில்லி: இந்திய தொலைபேசி துறையின் இரு பெரும் கம்பெனிகளான வோடாபோன் மற்றும் ஐடியா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய தொலைபேசி துறையில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

வோடாபோனைப் பொறுத்த வரை இந்தியாவில் உள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. அதேபோல் ஐடியா தொலைபேசி நிறுவனமும் இதே அளவு வாடிக்கையாளர்களுடன் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் இயங்கி வருகிறது. இரண்டு நிறுவனங்களுமே இந்த நிதியாண்டு முடிவில் , 4G சேவைகளை துவக்க உள்ளன.

இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்படுமானால், அந்த கூட்டு நிறுவனமானது 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக விளங்கும்.  தற்போது இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கு 26 கோடி வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  '

இது தொடர்பாக வோடாபோனின் இந்திய பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் இந்த  பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு முழுமையான பங்கு மாற்ற இணைப்பாக இருக்கும் என்றும், அதன் பிறகு இந்திய வோடாபோன் நிறுவனம் தனியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்பொழுது ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும்,  இணைப்புக்குப் பிறகு  இரு நிறுவனங்களுக்கும் சமமான உரிமைஇருக்கும் என்பதை அடிப்படையாக கொண்டே பேச்சுவார்தைகள்நடைபெற்று வருவதாக அந்நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முன்னரே இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்படுமென்ற பேச்சு நிலவினாலும், இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ அதிரடியாக  நுழைந்துள்ள பிறகு அது வலுப்பெற்ற பின்பு தற்போது நடைமுறைக்கு வர உள்ளது. இது கண்டிப்பாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு கலக்த்தை உண்டாக்கியுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com