ஜிஎஸ்டியால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி தெரியுமா?

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு -  சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறை நாடு முழுவதும்
ஜிஎஸ்டியால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி தெரியுமா?

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு -  சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறை நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதிலும் ஒரே சீரான வரிவிதிப்பு முறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு, உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையை பறைசாற்றும் என மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சில பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை உயர வாய்ப்பிருந்தாலும், வரிஏய்ப்பு நடவடிக்கைகளும், கருப்புப் பணப் பரவலும் முழுமையாகத் தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அதேவேளையில், பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் என்றும் நம்பப்படுகிறது.
இதுவரை பல்வேறு வகையான சரக்குகளுக்கும், பொருள்களுக்கும் விதிக்கப்பட்டு வந்த வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருந்தது. இதைத் தவிர, மதிப்புக் கூட்டு வரி, மத்திய வரி, மாநில வரி, உபரி வரி என பல்வேறு வரிவிதிப்பு நடைமுறைகளும் வழக்கத்தில் இருந்தன.

இந்த நடைமுறையை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பைக் கொண்டுவர கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே அச்சாரம் போடப்பட்டது.

1986-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், வரிச் சீர்த்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதன் பிறகு மத்தியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களால் அந்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த 2000- இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து முதன்முதலில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, இதுகுறித்த மசோதாவை வகுக்க தனிக் குழு அமைக்கப்பட்டது. பிறகு அது திருத்தியமைக்கப்பட்டது.

பாஜகவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு அதில் மேலும் பல மாற்றங்களைச் செய்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காட்சிகளும் மாறின. காங்கிரஸ் ஆட்சியின்போது ஜிஎஸ்டியை பாஜக எதிர்ப்பதும், பாஜக ஆட்சியின்போது காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்துவதும் என அரசியல் கட்சிகளின் சதிராட்டத்தில் சிக்கிக் கிடந்தது இந்த புதிய வரிவிதிப்புக் கொள்கை.

இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த தீவிர முயற்சிகளை முன்னெடுத்தது. அதன் விளைவாக, 17 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்ணயிக்கப்பட்ட புதிய வரிவிகிதம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அந்த வரிவிகிதமானது 5, 12, 18, 28 என நான்கு வகைகளாக விதிப்பட்டுள்ளது. புகையிலைப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இந்தப் புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக வர்த்தகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணுமாறும், தேவையான உதவிகளை வழங்குமாறும் வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மண்டல வாரியாக ஜிஎஸ்டி சேவை மையங்களை அமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நடுவே ஜூலை 1- ஆம் தேதியை ஜிஎஸ்டி தினமாக கடைப்பிடிக்கப் போவதாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் சில அத்யாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள வரி மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் ஏற்படும் வரி விகிதங்களை தெரிந்துகொள்வோம்.

வீட்டு உபயோகப் பொருட்கள்:

பொருட்கள்தற்போதைய வரிஜிஎஸ்டி வரி
கேஸ் அடுப்பு       28.81%      18%
அலுமினிய பாத்திரங்கள்    8.12%     12%
எல்பிஜி எரிவாயு      19.70%      18%
ஏர் கூலர்     28.81%      28%
வாஷிங் மெஷின்           27%28%
ஏர் கண்டிஷனர் (ஏசி)     27%   28%
குளிர்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்)          27%28%
மிக்ஸி     27%     18%
கிரைண்டர்      27%   18%
தொலைக்காட்சி பெட்டி(டிவி)   27%   28%
மின் விசிறி    27%    28%

உணவுப் பொருட்கள்:

பொருட்கள்தற்போதைய வரிஜிஎஸ்டி வரி
பால் 6% 0%
பழங்கள்   6%0%
பழ ரசம்18.12%12%
மினரல் குடிநீர்36%18%
சோடா பானங்கள்36%18%
சமையல் எண்ணெய்11%5%
நெய்(பிராண்டட்)5%12%
டீ (தேநீர்)2%5%
பிஸ்கெட் (கிலோ ரூ.100க்கு மேல்)16.09%18%
பிஸ்கெட் (கிலோ ரூ.100க்கு கீழ்)11.89%18%
கார்ன் பிளேக்ஸ்9.86%18%
ஜாம்5.66%18%
குழந்தைகளுக்கான உணவுகள் (பாட்டிலில் அடைக்கப்பட்டவை)7.06 18%
சமையல் உலோகப்பொருட்கள்11-20.5%18%
உணவு பரிமாறும் உலோக பொருட்கள்11%18%

உணவகங்களில் சாப்பாடு விலை படியல் விவரம்:

உணவு வகைகள்

பழைய விலை

 

புதிய விலை (ஏசி இல்லாமல்)

 

புதிய விலை ஏசியுடன்

இட்லி வரை
ரூ.5 - 20 வரைரூ.5.50 முதல் ரூ.22.50 வரைரூ.6 முதல் ரூ.23.50வரை
தோசை வகைகள்ரூ.20 - ரூ.70 வரைரூ.22.50 - ரூ.78.50 வரைரூ.23.50 - 82.50 வரை
பொங்கல் -ரூ.20 - ரூ.60 வரைரூ.22.50 முதல் ரூ.67ரூ.23.50 முதல் ரூ.70 வரை
பூரிரூ.20 - ரூ.70 வரைரூ.22.50 முதல் ரூ.78.50 வரைரூ.23.50 முதல் ரூ.82.50 வரை
கிச்சடிரூ.20 - ரூ.60 வரைரூ.22.50 - ரூ.67 வரைரூ.23.50 முதல் - ரூ.70 வரை
மதியம் சாப்பாடு (முழுமையானது) -ரூ.60 - 140 வரைரூ.67 - 157 வரைரூ.70 - ரூ.165 வரை
சாப்பாடு (பாதியானது)ரூ.30 - ரூ90.வரைரூ.33.50 - ரூ.100 வரைரூ.35.50 - ரூ.106 வரை

பிரியாணி வகைகள்
ரூ.80 - 250 வரைரூ.90 - ரூ.280 வரைரூ.95 - ரூ.295 வரை
இரவு சப்பாத்திரூ.33.50 - ரூ.78.50 வரைரூ.33.50 - ரூ.82.50 வரை
புரோட்டா வகைகள்ரூ.10 - ரூ.100 வரைரூ.11 - ரூ112 வரைரூ.12 - ரூ.118 வரை
பாஸ்ட்புட் வகைகள்ரூ.80 - ரூ.180 வரைரூ.90 - ரூ.200 வரைரூ.95 - ரூ.212 வரை

ஆடைகள் - ஸ்டேஷனரி:

பொருட்கள்தற்போதைய வரிஜிஎஸ்டி வரி
ரெடிமேட் ஆடைகள் (ரூ.1000க்கு கீழ்)5.6%5%
ரெடிமேட் ஆடைகள் (ரூ.1000க்கு மேல்)18.5%12%
காலணிகள் (ரூ.500க்கு கீழ்)14.41%5%
காலணிகள் (ரூ.500க்கு மேல்)14.41%18%
ஸ்டேஷனரி (காகிதம்)11-27%12-18%
ஸ்டேஷனரி (எழுதுப்பொருட்கள்)11-27%12-18%
ஸ்டேஷனரி (பிளாஸ்டிக்)11-27%18%
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாதனங்கள்17-18%5%

அழகுப் பொருட்கள்:

பொருட்கள்தற்போதைய வரிஜிஎஸ்டி வரி
லேப்டாப் கம்ப்யூட்டர்18%28%
ஸ்மார்ட்போன்18%12%
சோப்27%8%
அழகு சாதனப்பொருட்கள்27%28%
பற்பசை27%18%
மருந்துப் பொருட்கள்11%12%
வாசனை திரவியம்17.5 - 27%18%
கைக்கடிகாரம்20.64%28%
செல்போன்கள்13-24 % 12%
டிஜிட்டல் கேமிரா25 - 27%28%

வாகனங்கள்:

பொருட்கள்தற்போதைய வரிஜிஎஸ்டி வரி
சிறிய ரக கார்கள் (பெட்ரோல்)25-27%28+1 (கூடுதல் வரி)
சிறய ரக கார்கள் (டீசல்) 25-27 - 28+3 (கூடுதல் வரி)25-27%28+3 (கூடுதல் வரி)
நடுத்தரா ரக கார்கள் (1500 சிசி) 36-40%28+15 (கூடுதல் வரி)
சொகுசு கார்கள்41.5-44.5%28+15 (கூடுதள் வரி)
10,13 பயணிகள் செல்லும் வாகனம்39 -41%28+15%
இருசக்கர வாகனம்25.35%28%
350 சிசிக்கு மேற்பட்ட பைக்25-35%28+3 (கூடுதல் வரி)
உல்லாச படகு போன்ற சொகுசு பொருட்கள்25-27%28+3 (கூடுதல் வரி)
இசைக்கருவிகள் (கைவினை)0-12.5%0%
இதர இசைக்கருவிகள்28%
இரும்பு தாது 17-18%5%
எக்ஸ்ரே எந்திரங்கள்- 17.5%12 மற்றும் 18
குளுகோமீட்டர்ஸ்11-20.5%122%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com