ஜிஎஸ்டி அமல்: தொழில் துறையினர் அச்சப்பட வேண்டாம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தால் தொழில் துறையினர் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜிஎஸ்டி அமல்: தொழில் துறையினர் அச்சப்பட வேண்டாம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தால் தொழில் துறையினர் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜிஎஸ்டி வரி தொடர்பாக, தில்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, வரி விகிதகங்களைக் குறைப்பதால் ஏற்படும் பலன்களை நுகர்வோர் அனுபவிக்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதற்கு ஜிஎஸ்டியைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் அதிக லாபம் அடைவதைத் தடுக்க புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைக் கண்காணிப்பதற்கு 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அளவிலான ஆணையம் அமைக்கப்படும். வரி குறைப்புக்கு ஏற்ப பொருள்களின் விலையைக் குறைக்குமாறு உத்தரவிடுவதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், வரியைக் குறைப்பதால் ஏற்படும் பலன்களை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
இதனால், தங்களுக்கு இழப்பு ஏற்படுமோ என்று தொழில் துறையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள இந்தப் புதிய பிரிவை, முறையாகப் பின்பற்றும் நிறுவனங்கள், இதுதொடர்பாக கவலைப்படத் தேவையில்லை என்றார் நிர்மலா சீதாரமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com