இந்தியாவின் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் குறுகிய தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் குறுகிய தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஒடிஸா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் திங்கள்கிழமை பகல் 11.25 மணிக்கு இந்த ஏவுகணைச் சோதனை நடைபெற்றது. அப்போது தரையில் இருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது. இந்த ஏவுகணை முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.
பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பிற உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணையைத் தயாரித்திருந்தது. முன்னதாக, கடந்த மாதம் இதே வகையிலான ஏவுகணை இதே பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
தரையில் இருந்து வானில் 25 முதல் 30 கி.மீ. தொலைவில் உள்ள வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உண்டு. இந்த ஏவுகணை எந்தவிதமான வானிலையிலும் இலக்கைத் குறி தவறாமல் தாக்கும் என்பது சிறப்பம்சமாகும்.
ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததை அடுத்து டிஆர்டிஓ உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஏவுகணைத் தயாரிப்பில் இந்தியா முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது என்று ஜேட்லி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com