எதிர்ப்பது மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் பணியா?: நிதீஷ் குமார் கேள்வி

ஆட்சியில் இருப்பவர்களை எதிர்ப்பது மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் பணியா? என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்ப்பது மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் பணியா?: நிதீஷ் குமார் கேள்வி

ஆட்சியில் இருப்பவர்களை எதிர்ப்பது மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் பணியா? என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் பாஜகவை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்டவற்றில் மத்திய அரசை ஆதரித்தது. எனவே, நிதீஷ் குமார் பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய நிதீஷ் கூறியதாவது:
நான் பாஜக கூட்டணியில் இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஜிஎஸ்டியை எதிர்த்தது. ஆனால், அப்போதே நான் ஜிஎஸ்டி- க்கு ஆதரவாக இருந்தேன். ஏனெனில், ஜிஎஸ்டி- யின் தொடக்கத்தில் சில இடர்பாடுகள் இருந்தாலும், நீண்டகாலத்தில் அது அனைவருக்கும் நன்மையளிக்கும்.
ஆட்சியில் இருப்பவர்களை எதிர்ப்பது மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் வேலையா? மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் குறைகளை மட்டும் நாம் (எதிர்க்கட்சிகள்) கூறிக் கொண்டிருக்காமல், நாட்டு நலனுக்காக நம்மிடம் உள்ள மாற்றுத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில முதல்வர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவேதான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்களும், மாநில வணிக வரித் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்றார் நிதீஷ் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com