விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் சாதகங்களை திருடுகிறது பாஜக: சிவசேனை தாக்கு

மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் சாதகங்களை பாஜக திருடுகிறது என்று அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் சாதகங்களை பாஜக திருடுகிறது என்று அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியிருக்கும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
லாபங்கள், நஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டே, தற்போது அரசியல் விளையாட்டு நடக்கிறது. மக்களைக் குழப்புவதற்காகவே திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. வறுமையை ஒழிப்போம் அல்லது நல்ல காலம் வருகிறது 'போன்ற கோஷங்கள் என்னவாயின என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
விவசாயக் கடனுக்காக யார் போராடினர்கள்? தற்போது முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து சந்தோஷப்படுவது யார்? அதன் சாதகங்களை எடுத்து செல்வதும் யார்? சாதகங்களை திருடிச் செல்லுதல், பறித்துச் செல்லுதல் ஆகியவை தற்போதைய அரசியல் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
திட்டத்தின் சாதகங்களை எடுத்துச் செல்வதில் போட்டி நிலவினாலும், அத்திட்டம் கொண்டு வரப்பட யார் காரணமாக இருந்தார்கள் என்பது குறித்து பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். முந்தைய பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சிக்காலத்தில், ஏழைகளுக்கு ரூ.1-ல் பாரம்பரிய உணவு அளிக்கும் திட்டம் (ஜுங்கா பாகர் கேந்திரா திட்டம்)செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் கொண்டு வர வேண்டும்.
இந்த திட்டத்தின் சாதகத்தை நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பினால், அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. ஏனெனில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏழை மக்கள்தான் பயனடைவார்கள் என்று சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசிலும், மத்திய பாஜக கூட்டணி அரசிலும் சிவசேனை அங்கம் வகிக்கிறது. எனினும், விவசாயிகள் பிரச்னை, விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம் போன்றவற்றில், பாஜகவை சிவசேனை கடுமையாக விமர்சித்து வருகிறது.
மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யகோரி, விவசாயிகள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயக் கடனை மகாராஷ்டிர அரசு தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com