விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயம்

அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் பாபும் பாரே மாவட்டத்தில் 3 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான
விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயம்

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் பாபும் பாரே மாவட்டத்தில் 3 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று செவ்வாய்கிழமை இரவு திடீரென மாயமானது.

சகலீ என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) மாயமாகியுள்ளதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மழை மற்றும் மோசமான வானிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலைகளில் வசிக்கும் பொதுமக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுமாறு அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக அருணாசலத்தில் உள்ள ஜிரோவிற்கு உள்ளூர் டிரி விழாவில் கலந்து கொள்ள சென்ற உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரை இறக்கப்பட்ட அதேநேரத்தில் தான் ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது.

உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பேரழிவை மேற்பார்வையிடவும், சீன-இந்திய எல்லைக்கு அருகே துணை ராணுவப் பணியாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com