வரி நிர்ணயத்தை தெளிவுபடுத்த மத்திய அரசு புதிய வழிமுறை அறிவிப்பு:  ராம்விலாஸ் பாஸ்வான்

ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வரி நிர்ணயத்தை தெளிவுபடுத்த மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது என மத்திய உணவு மற்றும்
வரி நிர்ணயத்தை தெளிவுபடுத்த மத்திய அரசு புதிய வழிமுறை அறிவிப்பு:  ராம்விலாஸ் பாஸ்வான்

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வரி நிர்ணயத்தை தெளிவுபடுத்த மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்க பதிவில், ஜிஎஸ்டி வரிக்குள்ளாகும் பொருட்களின் புதிய விலை நிர்ணயம் குறித்த சில விளக்கங்களை தந்துள்ளார். சில்லரை வணிகர்கள் புதிய விலையை எவ்வாறு நிர்ணயிப்பது என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியின் கீழ், ஒரு பொருளின் விலை உயர்ந்திருப்பின், அந்தப் பொருளின் உற்பத்தியாளர் இரண்டு நாளிதழ்களில் புதிய விலையை அறிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும். புதிய விலையுடைய ஸ்டிக்கர்களை பழைய விலை மீது ஒட்ட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The shopkeepers not mentioning MRP revised because of GST will be liable for legal action.

New MRP should be mentioned on the items where prices have increased due to GST so that the Consumers can be aware of the impact of GST.

We have granted relaxation till 30.9.17 to industry under Packaged Commodities Rules to write new MRP on items of reduced prices due to GST

The benefits of decreased prices,by reduction of tax after imposition of GS, should reach the consumers.

- Ram Vilas Paswan

புதிய விதிகளை கடைபிடிக்காத உற்பத்தியாளர்கள் மீதும் கடைக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. பழைய கையிருப்பு பொருட்களை விற்றுத்தீர்க்க 3 மாத கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பழைய கையிருப்புகளை இந்த விதிமுறைகளின் படி விற்பனை செய்யலாம்.

அதே சமயம், விலை குறைக்கப்பட்ட பொருட்களுக்கு எந்தவித விளம்பரமும் தேவையில்லை.

ஆனால், புதிய விலையை குறிக்கும் ஸ்டிக்கர்களை கட்டாயம் ஒட்ட வேண்டும்.

பழைய விலையும் தெரியும் வகையில் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com