இந்தியா மீது ராணுவ நடவடிக்கை: சீன வல்லுநர்கள் வலியுறுத்தல்

சீனாவின் கருத்துகளை இந்தியா ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று சீனாவைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் கருத்துகளை இந்தியா ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று சீனாவைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிக்கிம் மாநில எல்லையில் அமைந்துள்ள டோங்லாங் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் அண்மையில் முறியடித்தது. இதையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீன அரசுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் இந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை வெளியிட்டுள்ளது.
அதில், ஷாங்காய் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை ஆய்வாளர் ஹு சிகியாங் கூறியுள்ளதாவது:
பிரச்னையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் 1962- ஆண்டு போரில் சீனாவிடம் இந்தியா தோல்வியடைந்ததை சீன தரப்பு உதாரணமாகக் கூறியது. ஆனால், இந்தியா அதனை ஏற்க மறுத்தால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.
பெய்ஜிங்கைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை வல்லுநர் சாங் சுகான்பிங் கூறியுள்ளதாவது:
சீனாவை நாங்கள் தீவிரமாக எதிர்க்கிறோம் என்று அமெரிக்காவிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் இந்தியா சீனாவை சீண்டி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் முந்தைய அதிபர் பராக் ஒபாமாவைப் போன்றவர் அல்ல. ஒபாமா இந்தியாவை மிகமுக்கியமான நாடாகவும், நெருங்கிய கூட்டாளியாகவும் கருதினார். ஆனால், டிரம்ப் இந்தியாவை கூட்டாளியாகக் கருதவில்லை. மேலும், இந்தியாவைவிட சீனா பலமான நாடு என்பதும் டிரம்ப்புக்குத் தெரியும்.
இந்தியா தனது எதிரி நாடாக சீனாவைக் கருதுகிறது. ஆனால், சீனா இந்தியாவை தனக்கு நிகரான நாடாகக் கருதவில்லை. பல்வேறு துறைகளில் சீனாவைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. சீனாவின் படை பலத்துடன் ஒப்பிடும்போது இந்தியா பலவீனமாகவே உள்ளது. எனவே, அமைதியாக இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com