சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டு: போலீஸ் தீவிர விசாரணை! 

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தானிய ரூபாய் நோட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டு: போலீஸ் தீவிர விசாரணை! 

பந்தனம்திட்டா: உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தானிய ரூபாய் நோட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

கேரளாவின் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில்.நாடு முழுவதும் இருந்து லட்சணக்கணக்கான மக்கள் இங்கே வந்து செல்கின்றனர். வருடத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மூன்று மாதங்கள் தான் இங்கே பிராத்தனைக்குரிய விஷேசமான காலங்களாகும். இதர நாட்களில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலானது, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல ஐந்து நாட்கள் மட்டும் பிரார்த்னைகாக்க திறந்திருக்கும்  

இந்நிலையில் சமீபத்தில் அங்கு காணிக்கையாக வந்திருந்த உண்டியல் பொருட்களை என்னும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில், மற்ற காசுகளுக்கிடையே பாகிஸ்தானிய இருபது ரூபாய் நோட்டு ஒன்றும கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரிகள், 'வழக்கமாக பிற நாட்டுக்கரன்சிகள் கிடைப்பது வழக்கம்தான் என்றாலும், தற்பொழுதான் முதன் முறையாக பாகிஸ்தானிய நாட்டு ரூபாய் நோட்டு கிடைத்திருப்பதன் காரணமாகவே விசாரணை நடத்தப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com