காஷ்மீரிலும் ஜிஎஸ்டி அமல்: பேரவையில் தீர்மானம் நிறைவேறியது

சரக்கு -  சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கான தீர்மானம் கடும் அமளிக்கு நடுவே ஜம்மு -  காஷ்மீர் சட்டப்பேரவையில் புதன்கிழமை நிறைவேறியது.
ஜம்மு -  காஷ்மீர் சட்டப் பேரவையில் ஜிஎஸ்டிக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.
ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவையில் ஜிஎஸ்டிக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

சரக்கு -  சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கான தீர்மானம் கடும் அமளிக்கு நடுவே ஜம்மு -  காஷ்மீர் சட்டப்பேரவையில் புதன்கிழமை நிறைவேறியது.
தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பின்படி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்திருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
ஒரே சீரான வரிவிதிப்பு கொள்கையான ஜிஎஸ்டி முறை கடந்த 1- ஆம் தேதி முதல் அமலாகி இருந்தாலும், காஷ்மீரில் மட்டும் நடைமுறைப்படுத்தவில்லை. அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை அது பாதிக்கும் என்று கூறி எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், ஜிஎஸ்டி சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பிடிபி-பாஜக கூட்டணி அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படாததால் சிக்கல் நீடித்தது.
இதற்கு நடுவே ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்காக ஜம்மு -  காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஜிஎஸ்டிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் பேரவையில் அமளியும், கூச்சல்-  குழப்பமும் நீடித்தது. இதன் விளைவாக ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு அந்த மாநிலத்தில் முட்டுக்கட்டை தொடர்ந்தது.
இந்தச் சூழலில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான சிறப்பு தீர்மானத்தை மாநில நிதியமைச்சர் ஹசீப் திரபு புதன்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ஜிஎஸ்டி எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை உணர்ந்தே அதனை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும், அந்த வரிவிதிப்பை காஷ்மீரில் நடைமுறைப்படுத்தாததால் மாநிலத்தின் வர்த்தகம் 50 சதவீதம் சரிந்துள்ளது. ஜிஎஸ்டி இல்லாமல் எந்தவகையிலும் செயல்பட முடியாத நிலைதான் தற்போது எழுந்துள்ளது. , ஜிஎஸ்டி சட்டமானது மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்றும், அதேபோல பிரத்யேக வரி விதிப்பு அதிகாரத்தை காஷ்மீருக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்யாது. ஒருவேளை, அவ்வாறு நடந்தால் இனி இந்த பேரவைக்கே நான் வரமாட்டேன் என்றார் அவர். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com