சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: விஜய் மல்லையாவுக்கு எதிராக மீண்டும் வாரண்ட்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை மும்பை
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: விஜய் மல்லையாவுக்கு எதிராக மீண்டும் வாரண்ட்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை மும்பை பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்துள்ளது.
ஐடிபிஐ வங்கியிடம் இருந்து பெற்ற ரூ.900 கோடி கடனை விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பாக விஜய் மல்லையா, கிங் ஃபிஷர் நிறுவனம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகக்கோரி, விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை பலமுறை அழைப்பாணைகளை (சம்மன்) அனுப்பியிருந்தது. அதையேற்று விஜய் மல்லையா நேரில் ஆஜராகவில்லை.
இதைத் தொட ர்ந்து, மும்பை பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், விசாரணையில் விஜய் மல்லையா நேரில் ஆஜராகவில்லையென்றும், எனவே அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை புதன்கிழமை மீண்டும் பிறப்பித்தது.
இந்தத் தகவலை அமலாக்கத் துறை வழக்குரைஞர் வேணிகோயங்கர் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கடந்த மாதம் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக் கொண்டு, விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது' என்றார்.
முன்னதாக, மும்பை பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் 57 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை கடந்த மாதம் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிகையில், விஜய் மல்லையா உள்ளிட்ட 9 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கிங் ஃபிஷர் நிறுவன அதிகாரிகள், ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் இருக்கும் தொடர்பு, ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ.900 கோடி கடன் தொகையில் ரூ.400 கோடியை வெளிநாட்டுக்கு விஜய் மல்லையா பல்வேறு வழிகளில் கொண்டு சென்றது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கில், மேலும் ஓர் துணை நிலை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் தனக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை தீவிரமடைந்ததையடுத்து, நாட்டை விட்டு விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேறினார். தற்போது அவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com