தமிழகத்தின் மேல்முறையீட்டு மனுவை சட்டப்படி எதிர்கொள்வோம்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு உரிய பதில் மனுவை கர்நாடகம் தாக்கல் செய்யும் என முதல்வர் சித்தராமையா
தமிழகத்தின் மேல்முறையீட்டு மனுவை சட்டப்படி எதிர்கொள்வோம்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு உரிய பதில் மனுவை கர்நாடகம் தாக்கல் செய்யும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் மழை பொழிவு இல்லாததால், கடும் வறட்சி நிலவியது. இதனால், மாநிலத்தில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவியது. எனவே, காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர முடியாமல் போனது. மாநிலத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழகம் கோருவது சரியல்ல.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழகம் அவ்வப்போது நீதிமன்றத்துக்குச் செல்வதும், அதனால் மாநிலத்தில் அடிக்கடி போராட்டங்கள், கலவரங்கள் வெடிப்பதும் வழக்கமாகியுள்ளது. கடந்த சில நாள்களாக அமைதியாக இருந்த தமிழகம், மீண்டும் காவிரி விவகாரத்துக்காக நீதிமன்றம் சென்றுள்ளது.
இந்த நிலையில், கடந்தாண்டு நிலுவை தண்ணீரையும், நிகழாண்டு ஜூலை வரை திறந்துவிட வேண்டிய தண்ணீரையும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நதிப்படுகையில் போதிய மழை பெய்யாததால், அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இருப்பினும், தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்து விட்டோம்.
இந்த நிலையில், தமிழகம் தொடந்து தண்ணீர் கேட்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு சட்டப்படி உரிய பதில் அளிக்கப்படும்.
அதுவரை சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com