மரபணு மாற்ற கடுகு இந்திய விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல்: பிரதமருக்கு விஞ்ஞானிகள் அவசரக் கடிதம்

மரபணு மாற்ற கடுகு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தடுக்குமாறு இந்திய விஞ்ஞானிகள் குழுவினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர
மரபணு மாற்ற கடுகு இந்திய விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல்: பிரதமருக்கு விஞ்ஞானிகள் அவசரக் கடிதம்


புது தில்லி: மரபணு மாற்ற கடுகு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தடுக்குமாறு இந்திய விஞ்ஞானிகள் குழுவினர் - இவர்களில் பலர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களாக இருந்தவர்கள்- பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மரபணு மாற்ற கடுகு விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ள விஞ்ஞானிகள் குழு, இந்த மரபணு மாற்ற கடுகினால் இந்தியா விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

நமது மத்திய அரசாங்கத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இந்திய விஞ்ஞானிகள் சிலர், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்திய விவசாயிகளுக்கும், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பயிர் வகைகளைக் கண்டுபிடித்து விவசாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வானது கவலையை அளிக்கிறது என்று 18 விஞ்ஞானிகள் சேர்ந்து மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மரபணு மாற்ற கடுகுக்கு அனுமதி: அன்புமணி கண்டனம்

தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணு மாற்ற மையத்தால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளைப் பயிரிடுவதற்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மத்திய சுற்றுச்சூழலு அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. ஒரு வேளை இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால் மரபணு மாற்றப்பட்ட கடுகு வணிகப் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு வந்து விடும்.

"நாங்கள், உங்களை மிகவும் வேண்டி கேட்டுக் கொள்கிறோம், இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மரபணு மாற்ற கடுகு குறித்து விசாரணை நடத்தவும், விற்பனைக்கு வராமல் உடனடியாக தடுக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்திய விவசாயிகளை வெளிநாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும். நாட்டை கட்டமைப்பதற்கான விவகாரங்களில், உங்களுடன் தோள் கொடுக்க நாங்கள் எப்போதும் உடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்ற கடுகு, வெளிநாட்டைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களின் காப்புரிமை பெற்றது என்ற உண்மை இங்கே மறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது விவசாயிகளின் நலன் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் நமது அறிவியல் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த விதைகளை உற்பத்தி செய்வதுதான் அவசியமே தவிர், வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்கும் விதைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com