நிதீஷ் குமாரை விமர்சிக்கக் கூடாது: காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் கண்டிப்பு

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை விமர்சிக்கக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அந்த மாநிலத்தைச் சேர்ந்த தனது கட்சித் தலைவர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிதீஷ் குமாரை விமர்சிக்கக் கூடாது: காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் கண்டிப்பு

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை விமர்சிக்கக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அந்த மாநிலத்தைச் சேர்ந்த தனது கட்சித் தலைவர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்
- காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்த மகா கூட்டணி கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது. இப்போதும் அந்தக் கூட்டணி நீடித்து வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு நீதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் முதலில் நிதீஷ் குமாரை விமர்சித்தார். தொடர்ந்து பிகார் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் நிதீஷை கடுமையாகக் குற்றம்சாட்டத் தொடங்கினர்.
பிகாரைச் சேர்ந்த தங்கள் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான மீரா குமாரை தங்கள் கூட்டணியில் உள்ள நிதீஷ் ஆதரிக்கவில்லை என்பது பிகார் மாநில காங்கிரஸாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அவரை உள்ளூர் காங்கிரஸார் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட ராகுல் காந்தி, நிதீஷ் குமரை விமர்சிக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.
பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளதரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதி செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் கூறிய அவர், அப்போது ராகுல் காந்தி என்ன கூறினார் என்பதை விவரிக்க மறுத்துவிட்டார். எனினும், இனிமேல் நிதீஷ் குமாரை விமர்சிக்கும் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராகுல், அசோக் செளதரிக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியும், நிதீஷ் குமாரும் மிகவும் நெருக்கமாகப் பழகக் கூடியவர்கள். 2015-ஆம் ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது நிதீஷ் குமாரை மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று லாலுவிடம் ராகுல் காந்திதான் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com