சரியாக பணியாற்றாத 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உ.பி. அரசு முடிவு

சரியாக பணிபுரியாத 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
சரியாக பணியாற்றாத 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உ.பி. அரசு முடிவு

சரியாக பணிபுரியாத 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசிடம் நிதி விவகார கையேடு ஒன்று அண்மையில் அளிக்கப்பட்டது. அதில், அரசு ஊழியர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்டவர்கள், 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்கள் சரிவர பணியாற்றவில்லையென்பது தெரிய வந்தால், அவர்களுக்கு காரணம் எதுவும் தெரிவிக்காமல், 3 மாத நோட்டீஸ் காலம் அளித்து, கட்டாய ஓய்வில் அனுப்பலாம். இதுதொடர்பாக அரசு அவ்வப்போது அறிவிப்பு வெளியிட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் ராஜீவ் குமார், அனைத்து துறை செயலர்கள், கூடுதல் செயலர்களுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில், 'மார்ச் மாதம் 31- ஆம் தேதி நிலவரப்படி, 50 வயதை கடந்த அரசு ஊழியர்களின் செயல் திறனை வரும் ஜூலை மாதம் 31- ஆம் தேதி வரை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து உத்தரப் பிரதேச அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ' இந்த உத்தரவில் புதிதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை; 50 வயதை கடந்த அரசு ஊழியர்களின் செயலாற்றும் திறனை ஆய்வு செய்வது தொடர்பான சட்ட விதி ஏற்கெனவே உள்ளது. சில அரசுத் துறைகள் இந்த விதியை சரிவர செயல்படுத்துவதில்லை. எனவே அந்த விதியை அனைத்து துறைகளிலும் உரிய வகையில் அமல்படுத்துவதை உறுதி செய்யவே, இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களிடமும் கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டிய நபர்களின் பட்டியலை, பணியாளர் நலத் துறையிடம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக, சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதையடுத்து, உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்ற பாஜக மூத்த தலைவர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com