ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி ஆக்கபூர்வ யோசனைகளைக் கூறுங்கள்: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான யோசனைகளைக் கூறுமாறு காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி ஆக்கபூர்வ யோசனைகளைக் கூறுங்கள்: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான யோசனைகளைக் கூறுமாறு காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி சட்டம் மிகவும் ஒழுங்கற்றதாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வியாழக்கிழமை விமர்சித்திருந்தார். மேலும் ஜிஎஸ்டி சட்டம் 7 விதமான வரி விகிதங்களைக் கொண்டிருப்பதால் இதை 'ஒரே தேசம் -  ஒரே வரி 'என்று மத்திய அரசால் கூறிக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது-
ஜிஎஸ்டி வரிவிதிப்பை நோக்கிய உருமாற்றதத்தால் ஏற்பட்டு வரும் நன்மைகளைக் குலைக்க சிதம்பரம் விரும்புகிறார். காங்கிரஸ் கட்சி, இந்த வரிவிதிப்பை கண்மூடித்தனமாக எதிர்க்காமல், அது தொடர்பான ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பானது அவசர கதியில் அமல்படுத்தப்படுகிறது என்பது சரியல்ல. இந்தப் புதிய வரிவிதிப்பு முறையானது பல்வேறு தரப்பினருடன் 17 ஆண்டுகள் விவாதிக்கப்பட்ட பிறகே அமலாகியுள்ளது.
இந்த வரிவிதிப்பை, வரி ஏய்ப்பவர்களைத் தவிர, நாடு முழுவதும் எல்லோரும் வரவேற்றுள்ளனர். இந்த வரிவிதிப்பு முறையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் சிலர் மட்டும் பிரச்னைகளைச் சந்தித்திருக்கலாம்.
மத்திய அமைச்சர்களும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜிஎஸ்டி குறித்து மக்களுடன் கலந்துரையாடி, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
இந்த வரிச் சீர்திருத்தத்துக்கான முன்முயற்சியைத் தொடங்கியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தானே தவிர, காங்கிரஸ் கூறிக் கொள்வது போல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அல்ல என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com