திருப்பதி லட்டுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி
திருப்பதி லட்டுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி:  திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் லட்டுப் பிரசாதம், அன்னதானம், வாடகை அறை உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த 2003-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட சேவை வரியிலிருந்து (வாட்) தேவஸ்தானத்துக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி மூலம் லட்டுப் பிரசாதம் தயாரித்தல், வாடகை அறை, பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் பொருள்கள், அன்னதானம் வழங்க தேவைப்படும் பலசரக்கு, காய்கறிகள், தலைமுடி விற்பனை என அனைத்துக்கும் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும், லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனை ஆகியவற்றுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமலை அன்னமய பவனில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லட்டுகள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. தங்க டாலர்கள் மீது 3 சதவிகிதமும், ஆயிரம் ரூபாயில் இருந்து 2,500 ரூபாய்வரை உள்ள தங்கும் விடுதிக்கு 12 சதவிகிதமும், 2,500 ரூபாய்க்கு மேற்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 18 சதவிகிதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

பக்தர்களுக்கு விரைவாகத் தங்கும் விடுதிகள் பெறுவதற்கு திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு அலுவலகத்தில் 10 கவுன்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com