ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதியில் விடுதிக்கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்!

ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்திற்குரிய கட்டணம்,
ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதியில் விடுதிக்கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்!

திருப்பதி: ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்திற்குரிய கட்டணம், மற்றும் கோயிலில் விற்கப்படும் தங்க டாலர் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வு ரூ.1,000த்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் விடுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி: தங்கும் விடுதி கட்டணத்தில் மாற்ற விவரம்:

பழைய கட்டணம்புதிய கட்டணம்
ரூ.1,500 ரூ.1,700
ரூ.2,000 ரூ.2,200
ரூ.2,500ரூ.3,000
ரூ.3,000ரூ.3,500
ரூ.3,500ரூ.4,100
ரூ.4,000ரூ.4,700
ரூ.4,500ரூ.5,300
ரூ.6,000ரூ.7,100
திருமணம் நடத்த ரூ.10,000க்கு...18 %
தங்க டாலர் விலையுடன்3%

ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 12 சதவீதமும், 2,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 18 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால், தற்போது திருப்பதி கோயிலில் 1,500 ரூபாய் கொண்ட அறைக்கு, இனி 1,700 ரூபாயும், 2000 ரூபாய் அறைக்கு இனி 2,200 ரூபாயும், 2,500 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு இனி 3000 ரூபாயும், 3000 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 3,500 ரூபாயும், 3,500 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 4,100 ரூபாயும், 4,000 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 4,700 ரூபாயும், 4,500 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 5,300 ரூபாயும், 6000 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதி கோயில் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது.

கோயிலில் விற்கப்படும் தங்க டாலர் விலையுடன் 3 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.

லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com