காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானியர் 2 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானியர் 2 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் காலை பூஞ்ச் மாவட்டத்தின் ராணுவ நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில், ராணுவ வீரர் முகமது சவுகத், அவரது மனைவி சபியா ஆகியோர் பலியானார்கள். மேலும், அவர்களின் 3 மகள்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து ஒரு நாள் கழித்து இந்திய வீரர்கள், பாகிஸ்தான் சிப்பாய்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது.  நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய வீரர்கள், சக்கா டா பக் மற்றும் கரி கர்மரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ நிலை ஒன்று குண்டு வீசி அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் 23 குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 29-ல் பூஞ்ச் ​​பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் நடத்தி துப்பாக்கி சூட்டில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com