மாநில தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!

பாஜக ஆட்சி பொறுப்பேற்று, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம்
மாநில தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!


புதுதில்லி: பாஜக ஆட்சி பொறுப்பேற்று, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவில்லை. இந்த சந்திப்பு முதல்முறையாக இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் மூலம் நிகழ உள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நிதி ஆயோக் சார்பில் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு தில்லியில் இன்று நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன், அந்தந்த மாநிலங்களின் நிதி, சுகாதாரம், வேளாண், தொழில்துறை மற்றும் திட்டச் செயலாளர்களும் பங்கேற்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநாட்டில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து மாநிலங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர்களை பிரதமர் மோடி ஒரே நேரத்தில் சந்திக்கிறார். இதில், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை, மானியங்களை நேரடியாக வழங்குவது, விவசாயம், ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றில் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது, மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும், பாதுகாப்பான குடிநீர், கழிவுநீர் மேலாண்மை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியுள்ளதாகவும், இதில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com