உணவு பாதுகாப்பு குறித்த ஆர்டிஐ கேள்விக்கு செம 'வெயிட்'டான பதில்?!

உணவு பாதுகாப்பு குறித்து தான் பதிவு செய்த புகார் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்த மெக்கானிக் காசிமையனுக்கு மிக வெயிட்டான பதில் கிடைத்துள்ளது.
உணவு பாதுகாப்பு குறித்த ஆர்டிஐ கேள்விக்கு செம 'வெயிட்'டான பதில்?!

சென்னை: உணவு பாதுகாப்பு குறித்து தான் பதிவு செய்த புகார் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்த மெக்கானிக் காசிமையனுக்கு மிக வெயிட்டான பதில் கிடைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய பதில் இதுவாகக் கூட இருக்கலாம். ஆனால், என்ன காசிமையன் கேட்ட கேள்விக்கான பதில்தான் கிடைக்கவில்லை. 

அதாவது திருவொற்றியூரைச் சேர்ந்த காசிமையன், தனது வீட்டுக்கு அருகே இருக்கும் கடையில் விற்பனையாகும் தரம் குறைந்த அரிசு குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். அதற்கு பதில் கிடைக்காததால், 2016ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போது, அவர் கேட்டிருந்த 7 கேள்விகளில்  3 கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டிருந்தது. மற்ற கேள்விகள் திருவள்ளூர் பகுதி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது குறித்து அவர் மீண்டும் கேள்வி எழுப்பியும் பதில் கிடைக்காததால் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடினார்.

வழக்கம் போல் இப்போது நடக்கவில்லை. அவர் புகார் அனுப்பிய அடுத்த நாளே, உணவுப் பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி பாலசுப்ரமணியத்திடம் இருந்து காசிமையனுக்கு ஒரு தபால் வந்துள்ளது. அதில், நூற்றுக்கணக்கான பேப்பர்களைக் கொண்ட சுமார் 5 கிலோ எடையில் பதில் வந்தது.

இது குறித்து காசிமையன் கூறுகையில், என்னுடைய புகாருக்கு என்ன பதில் என்று கேட்டுத்தான் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தேன். ஆனால், தவறுதலாக 2016ம் ஆண்டு முதல் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வந்த அனைத்துப் புகார் மனுக்களையும் தொகுத்து எனக்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் என் கேள்விக்கு பதில் மட்டும் கிடைக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்களின் வரிப்பணம் இப்படியெல்லாம் கூட வீணடிக்கப்படுகிறது என்று அவர் கவலை வெளியிட்டார்.

இது குறித்து பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் பெற அணுகியபோது அவர் முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்பில் இருப்பதாக அவரது அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com