குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை: கூட்டத்தை புறக்கணிக்கிறார் நிதீஷ் குமார்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை: கூட்டத்தை புறக்கணிக்கிறார் நிதீஷ் குமார்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகின்றன.
இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் கலந்து மாட்டார் என்று அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதில் நிதீஷ் குமாரும் கலந்து கொள்ள இருக்கிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவுக்கு எதிராக சிபிஐ
ஊழல் வழக்குப்பதிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டி, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், தில்லியில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு, தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் நிதீஷ் குமார் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்துக்கு நிதீஷ் குமார் தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com