சீனத் தூதரை ராகுல் சந்தித்ததால் சர்ச்சை: ராகுல் விளக்கம்

சிக்கிம் எல்லையில், இந்தியா- சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா, பூடான் நாடுகளின் தூதர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
சீனத் தூதரை ராகுல் சந்தித்ததால் சர்ச்சை: ராகுல் விளக்கம்

சிக்கிம் எல்லையில், இந்தியா- சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா, பூடான் நாடுகளின் தூதர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை மேலும் கூறியிருப்பதாவது:

சீனத் தூதர், பூடான் தூதர், முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பு மத்திய அரசுக்கு கவலை அளிக்குமானால், இந்தியா- சீனா இடையே பதற்றான சூழல் நிலவும் இந்த நேரத்தில், மத்திய அமைச்சர்கள் சீனா சென்றுள்ளது ஏன்? என அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இதற்கு முன்பு ஒருமுறை ஆயிரக்கணக்கான சீன ராணுவ வீரர்கள், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வேளையில், ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தவர் போல் என்னால் இருக்க முடியாது. (கடந்த 2014- ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்திருந்த புகைப்படத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்).

முக்கியப் பிரச்னைகளைத் தெரிவிப்பதே எனது பணி என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சீனத் தூதர் லுவோ ஜெளஹி, பூடான் தூதர் வெட்úஸாப் நாம்ஜியெல், முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தச் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பின்னர், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, ''மரியாதை நிமித்தம் காரணமாக, சீனா, பூடான் நாடுகளின் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர்ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்'' என்று தெரிவித்தார்.

இதுததொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
சிக்கிம் எல்லையில், இந்தியா- சீனா- பூடான் இடையேயான பதற்றான சூழலை ராகுல் காந்தியும், இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் நன்கு அறிவர்.

அவர்களுக்கும் நாட்டு நலன் மீது முழு அக்கறை உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com