நெடுஞ்சாலைகளில் சொகுசு பார்கள் அமைக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி!

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞசாலைகளில் சொகுசு பார்கள் அமைக்க அனுமதி கோரிய மனுக்களை  தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் சொகுசு பார்கள் அமைக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி!

புதுதில்லி: நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞசாலைகளில் சொகுசு பார்கள் அமைக்க அனுமதி கோரிய மனுக்களை  தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞசாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் மூலம் விபத்துகள் உண்டாவது பற்றிய பொதுநல மனு ஒன்றினை சமீபத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞசாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சாதாரண மதுக்கடைகளுக்கு பதிலாக தேசிய மற்றும் மாநில நெடுஞசாலைகளில் சொகுசு பார்கள் அமைக்க அனுமதி கோரி, தனியார் ஹோட்டல்கள் மற்றும் மதுபான கடை உரிமையாளர் சங்கங்கள் சில உச்சநீதிமன்றத்தில் வழக்குக்களை தொடர்ந்திருந்தன.

அவற்றை ஒன்றாக இணைத்து விசாரித்து வந்த உச்சநீதி மன்றம், இன்று தீர்ப்பினை வழங்கியது.

அதில் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞசாலைகளில் சொகுசு பார்கள் அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையம் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாநில அரசு தாக்கல் செய்யும் அறிக்கை  அல்லது மனுக்களே முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும் என்பதனையும் தெளிவுபடுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com