இந்தியா -  சீனா எல்லைப் பிரச்னை முறையாக கையாளப்படவில்லையா?: வெளியுறவுத் துறைச் செயலர் விளக்கம்

இந்தியா -  சீனா இடையே தற்போது எழுந்துள்ள எல்லைப் பிரச்னையை இரு நாடுகளும் திறம்பட கையாளாததற்கு குறிப்பிட்டுக் கூறும்படியான எந்தக் காரணமும் இல்லை என்று வெளியுறவுத் துறைச் செயலர்
இந்தியா -  சீனா எல்லைப் பிரச்னை முறையாக கையாளப்படவில்லையா?: வெளியுறவுத் துறைச் செயலர் விளக்கம்

இந்தியா -  சீனா இடையே தற்போது எழுந்துள்ள எல்லைப் பிரச்னையை இரு நாடுகளும் திறம்பட கையாளாததற்கு குறிப்பிட்டுக் கூறும்படியான எந்தக் காரணமும் இல்லை என்று வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிக்கம் எல்லையை முன்னிறுத்தி இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகப் போர் மூண்டுள்ள நிலையில், அவர் இத்தகைய கருத்தை கூறியுள்ளார்.
இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லையாக டோகா லா விளங்குகிறது. இதனை பூடான் டோகோலாம் என்றும், சீனா டோங்லாங் என்றும் அழைக்கின்றன.
இந்தப் பகுதிக்குள் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனப் படைகள், எல்லை தாண்டி வருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அண்மையில் நுழைந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
சிக்கிம் விவகாரத்தில் இரு தரப்பும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதற்கு சீனா, பதில் கருத்து தெரிவித்தும், மிரட்டல் விடுத்தும் வருகிறது. இதனால், டோகோ லா எல்லையில் அசாதாரண சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் வீரர்களை இந்தியா குவித்துள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் இதுதொடர்பாக பேசியதாவது:
இந்தியா -  சீனா இடையே இதற்கு முன்பும் எல்லைப் பிரச்னைகள் இருந்தன. அவற்றின் மீது ஓரளவு தீர்வு காணப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது எழுந்துள்ள எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், சீனாவும் நடவடிக்கை எடுக்காததற்கு குறிப்பிட்டுக் கூறும்படியாக எந்தக் காரணமும் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com