நீருக்காக இரு மாநிலங்கள் சண்டையிடுவதை விரும்பவில்லை: காவிரி வழக்கில் நீதிபதிகள் கருத்து!

நதிநீருக்காக இரண்டு மாநிலங்கள் சண்டையிடுவதை விரும்பவில்லை என்று காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கின் இறுதி வாதத்தின் பொழுது, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.    
நீருக்காக இரு மாநிலங்கள் சண்டையிடுவதை விரும்பவில்லை: காவிரி வழக்கில் நீதிபதிகள் கருத்து!

புதுதில்லி: நதிநீருக்காக இரண்டு மாநிலங்கள் சண்டையிடுவதை விரும்பவில்லை என்று காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கின் இறுதி வாதத்தின் பொழுது, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.    

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இரண்டாவது நாள் விசாரணையானது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பூ இன்று மீண்டும் துவங்கியது . அப்போது கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜராகி முன்வைத்த வாதம் பின்வருமாறு:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மைசூர் அரசுக்கும், அப்போதைய மதராஸ் (சென்னை) அரசுக்கும் இடையே காவிரி, வேளாண் பணிகள் தொடர்பாக 1924 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தினை தமிழகம் மீறியுள்ளது. ஒப்பந்த விதிகளுக்கு மாறாக பாசன பரப்பினை 21 லட்சம் ஏக்கர்களாக அதிகரித்துள்ளது. அபப்டியிருக்க எவ்வாறு ஒப்பந்தப்படி நீர் அளிக்க வேண்டுமே என்று முறையிடலாம்?

இவ்வாறு அவர் தனது தரப்பினை முன்வைத்தார். அதற்கு கர்நாடகாவின் அனைத்து குற்றசாட்டுகள் தொடர்பாகவும் நீதிமன்றத்திடம் முன்பே உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'நதிநீருக்காக இரண்டு மாநிலங்கள் சண்டையிடுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், தமிழகம், கர்நாடகா ஆகிய இரண்டும் இந்தியாவின் அங்கம்தான்' என்றும் கருத்து தெரிவித்தனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com