காவிரி வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட மாட்டாது: உச்சநீதி மன்றம் அறிவிப்பு! 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு மீண்டும் ஒருமுறை தீர்ப்பாயத்துக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்று உச்சநீதி மன்றம் உறுதிபட அறிவித்துள்ளது.
காவிரி வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட மாட்டாது: உச்சநீதி மன்றம் அறிவிப்பு! 

புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு மீண்டும் ஒருமுறை தீர்ப்பாயத்துக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்று உச்சநீதி மன்றம் உறுதிபட அறிவித்துள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இரண்டாவது நாள் விசாரணையானது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பூ இன்று மீண்டும் துவங்கியது .

அப்போது கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜராகி தமிழகத்தின் மீது குற்றசாட்டுகளை முன்வைத்து வாதம் புரிந்தார். அதற்கு கர்நாடகாவின் அனைத்து குற்றசாட்டுகள் தொடர்பாகவும் நீதிமன்றத்திடம் முன்பே உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'நதிநீருக்காக இரண்டு மாநிலங்கள் சண்டையிடுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், தமிழகம், கர்நாடகா ஆகிய இரண்டும் இந்தியாவின் அங்கம்தான்' என்றும் கருத்து தெரிவித்தனர்.    

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களின் பொழுது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு மீண்டும் ஒருமுறை தீர்ப்பாயத்துக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது. இனி இது தொடர்பான முறையான வழக்கு  விசாரணை மற்றும் உத்தரவுகளை உச்சநீதிமன்றமே செயல்படுத்தும். அதேபோல நடுவர் மன்றத்தில் பின்பற்றிய நடைமுறைகளை இங்கே முன்வைக்க வேண்டாம். அதேபோல நடுவர் மன்றத்தில் முன்னரே எடுத்துவைக்கப்பட்ட வாதங்களையும் இங்கே மீண்டும் முன்வைக்க வேண்டாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com