நடுக்கடலில் மீனவர்கள் காணாமல் போனால்? கண்டுபிடிக்க வந்துவிட்டது புதிய மொபைல்-ஆப்

மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் மீனவர்கள் காணாமல் போனால்? கண்டுபிடிக்க வந்துவிட்டது புதிய மொபைல்-ஆப்


சென்னை: மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப உதவியோடு உருவாக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு உதவிக் கருவி (SARAT என்ற மொபைல் ஆப்-புக்கு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மீட்பு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மொபைல் ஆப் மூலமாக படகு, கப்பல்கள், பயணத்தில் இருக்கும் மனிதர்கள் என 65 விதமான பொருட்களையும் தேட முடியும்.  கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆப், தென்னிந்திய கடலோர மாநிலங்களில் பயன்படுத்தப்படும் 9 மொழிகளிலும் பயன்படுத்தலாம்.

இந்த ஆப் எப்படி செயல்படும்?
மீனவர்களுடன் சென்ற படகு காணாமல் போனதாக தகவல் வந்தால், அவர்களைத் தேடப் போகும் நபர்களோ அல்லது அங்கே மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்களோ, இந்த ஆப்பைப் பயன்படுத்தி, அந்த படகு கடைசியாக எங்கே இருந்தது அல்லது தற்போது எங்கே இருக்கிறது, எந்த கடற்கரைப் பகுதியில் இருந்து அவர்கள் இருக்கும் இடம் எவ்வளவு தொலைவு என்பது போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

இந்த மொபைல் ஆப், தேடுதல் பணியில் ஈடுபடும் இந்திய கடலோரக் காவற்படை, கடற்படை, கடலோரப் பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com