சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்கும்போது தேஜஸ்வி மைனர் அல்ல: சுஷில் குமார் மோடி

பிகார் மாநிலத்தில் ரயில்வே உணவகம் அனுமதி அளித்ததற்காக, 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக வாங்கும்போது, துணை
சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்கும்போது தேஜஸ்வி மைனர் அல்ல: சுஷில் குமார் மோடி

பிகார் மாநிலத்தில் ரயில்வே உணவகம் அனுமதி அளித்ததற்காக, 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக வாங்கும்போது, துணை முதல்வரும், லாலு பிரசாதின் மகனுமான தேஜஸ்வி பிரசாத் மைனர் அல்ல என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.
அதை மறுக்கும் விதமாக, சுஷில் குமார் மோடி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேஜஸ்வி பிரசாத் உணர்ச்சிகரமாகப் பேசி, தனது குற்றத்தை மறைக்க முடியாது. தனியாரிடம் இருந்து 3 ஏக்கர் நிலத்தை வாங்கும்போது, தேஜஸ்வி பிரசாதுக்கு மீசையும், இருந்தது, தாடியும் இருந்தது.
பாட்னாவில் அந்த 3 ஏக்கர் நிலத்தை ரூ.1.47 கோடிக்கு டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு கோச்சார் சகோதரர்கள் கடந்த 2005- ஆம் ஆண்டு விற்பனை செய்தனர்.
ரயில்வே உணவகத்தின் உரிமத்தை கோச்சார் சகோதரர்கள் பெற்றுக் கொண்ட பிறகு, அந்த 3 ஏக்கர் நிலம், டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்திடம் இருந்து லாலு குடும்பத்தினருக்கு கைமாற்றப்பட்டது. அதாவது, கடந்த 2010- ஆம் ஆண்டில் இருந்து 2014- ஆம் வரையிலான காலகட்டத்தில், லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி பெயருக்கும், தேஜஸ்வி பிரசாத் பெயருக்கும் அந்த இடம் கைமாற்றப்பட்டது.
அந்த இடத்தில், மாநிலத்திலேயே மிகப்பெரிய வணிக வளாகம் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த இடம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று தேஜஸ்வி கூறுவாரா? மேலும், தில்லி நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் ரூ.115 கோடி மதிப்புள்ள 4 மாடி கட்டடம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று தேஜஸ்வி கூறுவாரா?
ஊழல்களில் தொடர்புடைய தேஜஸ்வியும், அவரது குடும்பத்தினரும் பதவி விலக மறுத்தால், அவர்களை முதல்வர் நிதீஷ் குமார் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் சுஷில் குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com